Siva Puranam In Tamil Pdf Download

சிவ புராணம் : மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகம்

| Samayam Tamil | Updated: Mar 10, 2021, 12:22 PM

மகா சிவராத்திரி : திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார், தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதல் பதிகமாக வருவது சிவபுராணம். நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்கநமச்சிவாய இமைப் பொழுதும் என் நெஞ்சில்! நீங்காதான் தாள் வாழ்க!

Sivapuranam Tamil Lyrics

ஹைலைட்ஸ்:

  • திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார், தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம்.
  • கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதல் பதிகமாக வருவது சிவபுராணம்.
  • நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க நமச்சிவாய இமைப் பொழுதும் என் நெஞ்சில்! நீங்காதான் தாள் வாழ்க!
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார், பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும், மாணிக்க வாசகர் பரம்பொருளான சிவனை போற்றி வணங்கிய சிவபுராணம் என பல பெருமைகளைக் கொண்ட திருவாகசகத்திற்கு முதல் பதிகமான சிவபுராணத்தின் முதல் பதிகத்தை இங்கு பார்ப்போம்...

சிவமயம்
திருச்சிற்றம்பலம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)

சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க
நமச்சிவாய இமைப் பொழுதும் என் நெஞ்சில்! நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

சிவனின் மூன்று பிள்ளைகளின் அறியாத அற்புத கதைகள்

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன்பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் குழல் வெல்க

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீர் ஆர் பெருந்துறை நம்தேவன் அடி போற்றி

சிவாலயங்களில் அதிக பலன் கிடைக்க பிரதட்சணம் செய்யும் வழிமுறை

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

கண் நுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் நிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்

புல் ஆகிப் பூடு ஆய்ப் புழுஆய் மரம் ஆகிப்
பல் விருகம் ஆகிப் பரவை ஆய் பாம்பு ஆகிக்
கல் ஆய் மனிதர் ஆய்ப் பேய் ஆய்க் கணங்கள் ஆய்
வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய்ச்
செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்

சிவனின் மூன்று மகள்கள் பற்றி தெரியுமா?

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றே
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!

வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் போய் அகல வந்து அருளி
மெய்ஞானம் வி.மிளிர்கின்ற மெய்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல் விக்கும் நல் அறிவே

கிருஷ்ணர் ஏன் வசுதேவர்- தேவகிக்கு மகனாக பிறந்தார்? -புராணங்கள் கூறும் கதை இதோ

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய்! சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலோடு நெய் கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிப்
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பு ஆகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன் மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயின் தலையை வெட்டிய பரசுராமர்... அடுத்து அவர் கேட்ட வரம் என்ன தெரியுமா...!

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே தேன் ஆர் அமுதே! சிவபுரனே
பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறு
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே

அன்பருக்கு அன்பனே! யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே
ஆதியனே! அந்தம் நடு ஆகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட் கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்

நோக்கு அரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே ! காண்பு அரிய பேர் ஒளியே
ஆற்று இன்ப வெள்ளமே ! ஆத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச், சொல்லாத நுண் உணர்வாய்

மகா சிவராத்திரி சிவனுக்குரிய காயத்ரி மந்திரம், அஷ்டோத்திர சத நாமாவளி போற்றி மந்திரங்கள்

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே ! தேற்றத் தெளிவே ! என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே! உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட் கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா! அரனே ஓ ! என்று என்று

போற்றிப் புகழ்ந்து இருந்து பொய் கெட்டுமெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே
கள்ளப் புலக் குரம்பை கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லையுள் கூத்தனே! தென் பாண்டி நாட்டானே!

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து

திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்...

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்

இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்

Web Title : thiruvasagam sivapuranam lyrics with meaning in tamil
Tamil News from Samayam Tamil, TIL Network

Source: https://tamil.samayam.com/religion/pooja-vidhanam/thiruvasagam-sivapuranam-lyrics-with-meaning-in-tamil/articleshow/76526418.cms

Posted by: burlsumnere0198721.blogspot.com

Post a Comment

Previous Post Next Post